Tuesday, May 17, 2011

வரும் வழியில், காலை வெயிலில்!

=============================
ஜனநாயகமே
இனி சுதந்திரமாக நடைபோடு,
இது அன்னையின் தமிழ்நாடு
- கழக மணிகளின் குசும்பு
=============================
First day in office CM has held an orientation meeting to re-instate the belief that the elected members can deliver all the election promises if they all work hard enough and stay focused. In all the meetings the person who was an adviser to APJ Abdul Kalam in his presidential cadre said to have presented ppts to elected members
=============================
எனக்கு தெரிந்தவர், தெமுதிக முதல் முறை சட்டசபை உருப்பினரிடம் உதவி கேட்கப்போய் இருக்கும்பொது, அந்த இளைஞர், "நான் இன்னும் பதவிப்பிரமாணமே எடுக்கவில்லை, இனிமேல்தான் என் "Capacity" என்ன என்று எனக்கு தெரிய வரும், தெரிந்த பின் என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை கண்டிப்பாக செய்கிறேன்" என்று உறுதி அளித்திருக்கிரார்

எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான் என்றாலும், சிறிதும் கூச்சமின்றி படோடோபமின்றி, தனக்கு தெரியாததை தெரியாது என்று ஒத்துகொள்ளும் இந்த சட்டசபை உறுப்பினர் மேல் மரியாதையும், அதே சமயம், இம்முறை முதல்வருக்கு வலுவான சட்டசபை உறுப்பினர்கள் கிடைக்கவில்லையோ என்ற வறுத்தமும் எழுகிறது!

வலுவான சட்டசபை உறுப்பினர்கள் மட்டும் என்ன கிழித்து விட்டார்கள் என்று அங்கலாய்என்று நீங்கள் அங்கலாய்ப்பதுகேட்கிறது! அவர்கள் தங்கள் அதிகார பலத்தை சொத்துக்குவிப்பிலும், குடும்ப க்ஷேமத்திற்கும்தான் முதலில் செலவிட்டார்கள் என்பது திண்ணம். அதே நேரத்தில் முதல் முறை சட்டசபை உறுப்பினர்கள் நிறைந்த(20+) அவைக்கு திரம்பட செயலாற்றுவதற்கு சிறிது நேரம் பிடிக்கத்தான் செய்யும், என்பது ஒரு மைனஸ் பாயிண்ட்தான்!
=============================
எனக்கு என்னவோ போட்டி போட்டுக்கோண்டு எல்லோரும் நல்லது செய்ய நினைக்கிறார்களோ என்றும்  தோன்றுகிறது!
=============================
வாழ்க தமிழகம், வாழ்க பாரத மணித்திருநாடு

No comments: