Saturday, June 25, 2011

ஆரண்ய காண்டம் - எது தேவையோ அது தர்மம்


படத்தின் பெயர், மற்றும் முதல் காட்சி: கி பி 400 சாணக்யன்: "எது தேவையோ அது தர்மம்" இவை இரண்டையும் வைத்து படத்தை வரலாறோடு முடி போட்டு விடாதீர்கள்!

படத்தை பார்த்தபோது "நீ புடுங்குறது அம்புட்டும் தேவை இல்லாத ஆணிதான்" - என்றுதான் தோன்றியது!

இப்போது கிபி 2011இல் சாணக்யன் இருந்தால் அவன் இப்படித்தான் சொல்லி இருப்பான்:

"எதை நாம் தேவை என்று நினைக்கிறோமோ அது நமக்கு தர்மமாக படும்!" என்று.

உதாரணத்திற்கு படத்தின் உச்சகட்ட இறுதிக்காட்சி: "சப்பை ஒரு புழு அவன் சொன்னது சரிதான், ஆடு புல்ல திங்கும், புலி ஆட்ட திங்கும்!வாழ்க்கைன்னா அப்படித்தான் - என்பது சப்பையின் மரணத்திற்கு சாக்காக முன் வைக்கப்படுகிறது!" - எதிர்பாராத திருப்பம், இயல்புக்கு மாறான முடிவு என்று நினைத்து, guilt free murder ஐ justify செய்தது சரியாக படவில்லை!

JK, பாலு மகேந்திரா, பாலா போன்றவர்கள் ராவாக ஒரு விஷயத்தை எடுக்கும்போது கூட மனிதம் அங்கு தனித்து நிற்கும்! கடைசி நிமிடத்தில் மனசு மாறிய customer இடம் காசு வாங்க மறுத்து ரோட்டில் வீசி எரிந்து விட்டு செல்லும் பரத்தையை தன் சிறுகதையில் படம் பிடிக்கும் JK, எந்த logicஉம் இல்லாமல் மன நிலை சரியில்லாத ஒரு பெண்ணை மிக மோசமான நிலையில் இருந்து மீட்டு, பராமரித்து தன்னையும் அறியாமல் அவள் அறியாமையை நேசித்து, அவள் தன்னை பிரிந்து போகிறாள் எனும்போது நொந்து போய் அதிர்ந்து அழுது புரளும் கதாபாத்திரத்தை வடித்த பாலுமகேந்திரா, தன் ஒட்டு மொத்த கௌரவத்தையும், EGO வையும் தூக்கி எரிந்து விட்டு ஒரு சாதாரண குடிசையில் வாழும் இரண்டு ஜீவன்களுக்காக தரை இறங்கி வரும் ஒரு மாபெரும் highness ஐ திரையில் கொடுத்த பாலா.

ஆரண்ய காண்டமும் ஒரு ராவான படம்தான்! சிங்கிள் லைன் மூவி! காலையில் கலவியில் ஆரம்பித்து ஒரு பெண்ணின் விடுதலையில் முடியும் படம்!

ஒவ்வொரு இடத்திலும் எடிட்டர் மிக அருமையாக செய்திருப்பதாக சிலாகித்தான் நண்பன்! படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்டபோது மற்றொரு நண்பன் படத்தில் மெசேஜ் எல்லாம் கிடையாது என்று சொல்ல, மேசெஜோ கதையையோ எதிர்பார்க்காத நான், ஏதோ ஒன்று மனதில் நிற்காமல் தொக்கி நிற்பதாக உணர்ந்து யோசித்தபோது தான் படம் புரிந்தது!

சிறு communication gap இல் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது! ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பாஸ் சொல்வதை எதிர்ப்பதால் ரிஸ்க் எடுத்து, பொருளையும் எதிர்த்தவனையும் தூக்க திட்டமிடும் பாஸ் கதாபாத்திரத்தில்  ஜாக்கி ஷராப் - தேர்ந்த நடிப்பு, மனதில் ஒட்டாத தாதா முகம்! Sorry director - Nativity was missing a bit! முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் டையலாக் டெலிவரி நன்றாக வரவேண்டும் என்றால் கட்டாயம் அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்! அல்லது அந்த மொழி பேசுபவர்களை நன்றாக உள்வாங்கி இருக்க வேண்டும்!


கதையின் கதாநாயகன் பசுபதி கதாபாத்திரமாக கொள்ளலாம். சிக்கலில் இருந்து தப்பிக்க திட்டம் இட்டு வெற்றி பெறும் இந்த கதாபாத்திரத்தை மிக நன்றாக செய்து வெற்றிபெற்றிருக்கிறார் சம்பத்!

எனக்கு தேவை பணம் மற்றும் அய்யா உயிர்! இதற்காக மனசாட்சியை கூட விற்க தயார் என்று துணியும் ஒரு கதாபாத்திரம் தான் மிகப்பெரிய சறுக்கல்! எல்லாரும் செண்டிமெண்டாக லாரி மோதி இறக்க போகிறாள், சப்பை ஆவி அவளை பார்த்து சிரிக்க இவளுக்கு புத்தி வந்து இறந்த பின் சப்பையோடு இணைகிறாள், சப்பையும் மன்னித்து ஏற்று கொண்டு வெள்ளை தேவதைகளோடு வானத்தில் கலக்க "The End" slide போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது சகஜம்! அதை மாற்றி "guilt free" soul ஆக அந்த கதாபாத்திரத்தை காண்பித்திருப்பது புதுமை பட் மனசு ஒத்துக்க மாட்டேங்குது!

At the least, லாரி கிராஸ் செய்தபின் ஒரு நிமிடம் சப்பையின் பிரிவை எண்ணி வருந்தி, பிறகு தன்னிலைக்கு வந்து கண்ணீரை துடித்த படியே பயணிப்பதாக காண்பித்திருக்கலாம்!

உயிர்வாழ தேவையானவைகளை தேவை என்று வகைப்படுத்தினால், உயிர்வாழ வெறும் நாலு இட்டிலி கொஞ்சம் சட்டினி போதும் - இல்லையா?

ஐம்பது லட்சம், இரண்டு கோடி சரக்கு எல்லாம் ஓவர்!

மொத்த படத்தில் மிக அருமையாக நடித்திருப்பது ஜமீந்தாரும் அந்த சிருவனும்தான்! காஞ்ச படத்தில் கொஞ்சம் கொஞ்சம் பசுமை - இவர்களின் மூலம் கிடைத்த நகைச்சுவை!

ஆனது ஆச்சு! இத்தோட விட்டுடலாம்னு கை கொடுக்க வர்ற இடத்துல - வலி, எப்படியாவது இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நினைப்பு, அதே நேரத்தில் தப்பு செய்வது நீர்தான் நானில்லை என்ற ஒரு சாதாரண மனிதனின் மனப்போக்கு என்று இயக்குனரும் சரி, நடிகரும் சரி பின்னி எடுத்திருக்கிறார்கள்!

மனதில் நிற்க ஒன்றுமில்லாத - பல சறுக்கல்களை தாண்டி எழுந்து நிற்கிறார் இயக்குனர்!

1 comment:

Vasanth Saminathan said...

very worst review ever seen. better u need not reviewed.